அமைச்சரவை தீர்மானத்திற்கு அமைவாக , பாடகியான யொஹானி டி சில்வாவுக்கு வழங்கப்பட்ட காணியின் பெறுமதி தற்போது வெளியாகி உள்ளது.
பத்தரமுல்லை ரொபர்ட் குணவர்தன வீதியில் அமைந்துள்ள குறித்த காணியின் பெறுமதி 4 கோடி ரூபாய் என அரச மதிப்பீட்டு திணைக்களம் மற்றும் காணி பதிவு திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
குறித்த பிரதேசத்தில் ஒரு பேர்ச் காணியின் விலை தற்போது 4 மில்லியன் ரூபாவை கடந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமைச்சரவை யோசனைக்கமைவாக அவருக்கு 9.68 பேர்ச் காணி வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.
மேலும் 1996 ஆம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்ற அணி வீரர்களுக்கு 99 வருட குத்தகை அடிப்படையில் ஒதுக்கப்பட்ட காணிக்கு அருகாமையில் யொகானிக்கான காணி இருப்பதாக அமைச்சரவை தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.






