கிளிநொச்சி பொது வைத்தியசாலையினால் விசேட நடமாடும் வைத்திய சேவை!

கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையின் மருத்துவ குழுவினரால், 2022ம் ஆண்டு தை 01ம் திகதி முதல் நாட்பட்ட நோயாளர்கள் மற்றும் படுக்கை நோயில் உள்ளோருக்கான மருத்துவ தேவைகளை அவரவர் வீடுகளிற்கு சென்று பூர்த்தி செய்யும் விசேட வேலைத்திட்டம் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த சேவையை பெற்றுக்கொள்ள விரும்புவோர் 0212283037 எனும் தொலைபேசி இயக்கத்திற்கு அழைத்து சேவையை பெற்றுக்கொள்ள முடியும் என கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை பணிப்பாளர் வைத்தியர் சுகந்தன் தெரிவித்துள்ளார்.

அதற்கு அமைவாக,

பொன்நகர், பாரதிபுரம், மலையாளபுரம், விவேகாநந்தாநகர், கிருஸ்ணபுரம், உதயநகர் கிழக்கு, உதயநகர் மேற்கு, அம்பாள்குளம், ஆனந்தபுரம், தொண்டமான் நகர், கனகாம்பிகைகுளம், அம்பாள நகர், திருவையாறு, திருவையாறு மேற்கு, இரத்தினபுரம், கிளிநொச்சி நகர், மருதநகர், பன்னங்கண்டி, கனகபுரம், திருநகர் தெற்கு, திருநகர் வடக்கு, கணேசபுரம், ஜெயந்திநகர், பெரிய பரந்தன் பகுதிகளில் குறித்த சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *