கூரிய ஆயுதத்தால் படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி முழுகடையடைப்பு போராட்டம்

படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி, பரந்தன் பகுதியில் முழுகடையடைப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி பரந்தன் சந்திப் பகுதியில் புத்தாண்டு தினமான முதலாம் திகதி இரவு கூரிய ஆயுதத்தால் குத்தி படுகொலை செய்யப்பட்ட இளைஞருக்கு நீதிக்கோரி பரந்தன் வர்த்தகர்கள் இன்று (03) முழுகடையடைப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.

பரந்தன் சந்திப் பகுதியில், குணரட்னம் கார்த்தீபன் எனும் 24 வயதுடைய இளைஞர் படுகொலை செய்யப்பட்டுள்ளதோடு, மேலுமொருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார் .

இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட எவருமே இதுவரை கைது செய்யப்படவில்லை.

கொலையாளிகள் ஏற்கனவே பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புபட்டதுடன் பொலிசாருடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டவர்களாகவுள்ளனர் என்றும் உயிரிழந்தவரின் உறவுகள் ஆதங்கம் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு நீதி வேண்டியும் கொலையுடன் தொடர்புபட்டோரைக் கைது செய்யுமாறும் கோரிக்கை விடும் வகையில் பரந்தன் வர்தகர்கள் தமது வர்த்தக நிலையங்களை மூடி கதவடைப்பை முன்னெடுத்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *