கொழும்பிற்குள் பிரவேசிக்கும் சில வீதிகளில் வாகன நெரிசல்!

கொழும்பிற்குள் பிரவேசிக்கும் சில வீதிகளில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறிப்பாக பேலியகொட – களனிபாலம, ராஜகிரிய நாடாளுமன்ற சுற்றுவட்டம் மற்றும் காலி வீதியில் வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளது.

அரச சேவையாளர்கள் வழமையாக பணிகளுக்கு திரும்பியுள்ள அதேநேரம் பாடசாலைகளின் கற்றல் செயற்பாடுகள் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையிலே வாகனங்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *