முன்னாள் நாடளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக புதிய போராட்டத்தை ஆரம்பிக்கவுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
சிறையில் உள்ள ரஞ்சன் ராமநாயக்கவைச் சந்திப்பதற்காக இன்று , காலை வெலிக்கடை சிறைச்சாலைக்குச் சென்ற எதிர்க் கட்சித் தலைவர்,ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
ஊழல் மற்றும் அநீதிக்கு எதிராக எப்போதும் போராடும் மனிதாபிமான மிக்க பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்காக மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்.
இதற்காக ஐக்கிய மக்கள் சக்தி முழு அர்ப்பணிப்புடன் செயற்படும். தமது கட்சியின் இளம் உறுப்பினர்களின் பங்கேற்புடன் போராட்டம் ஆரம்பிக்கப்படும்.
ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்யுமாறு தாம் பல தடவைகள் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளோம்.ஆனால் இன்னமும் பதில் கிடைக்கவில்லை என தெரிவித்துள்ளார்.