ஒமிக்ரான் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது! சுகாதார அதிகாரிகள் எச்சரிக்கை

இலங்கையில் கொரோனா வைரஸின் ஒமிக்ரான் மாறுபாடு சமூகப் பரவலடைய ஆரம்பித்துள்ளது என சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் மருத்துவ ஆராய்ச்சி நிறுவனத்தின் விசேட வைத்திய நிபுணர் நதீகா ஜனகே இதனை தெரிவித்துள்ளார்.

எதிர்காலத்தில் இலங்கையில் ஆதிக்கம் செலுத்திகக்கூடிய கொரோனா தொற்றின் மாறுபாடாக இது மாற்றமடையலாம்.

இதுவரை இலங்கை வைத்தியசாலையில் ஒமிக்ரான் மாறுபாடு உறுதியான நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்று பரவுவதற்கான ஆரம்ப கட்டத்தைப் போன்று அன்றாட நடவடிக்கைகளை மட்டுப்படுத்த வேண்டிய அவசியமில்லை.

எனினும், சுகாதார வழிகாட்டுதல்களை மக்கள் அவசியம் பின்பற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.

பேருந்து கட்டணங்கள் அதிகரிப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *