இந்த ஆண்டிலிருந்து பசுக்களை வதைக்கும் செயற்பாட்டிலிருந்து விடுபட்டு, அன்பே சிவம் என்ற வழியில் நாம் நடக்க வேண்டும் என அகில இலங்கை சைவமகாசபை கோரிக்கை விடுத்துள்ளது.
யாழ். ஊடக அமையத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
எந்த மதமானாலும், உயிரானாலும் நாம் அன்பு செலுத்த வேண்டும். இதனை அடிப்படையாகக் கொண்டு தான் நாம் ஜீவகாருண்ய செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றோம். இந்துக்கள் பசுவை தெய்வமாக பார்க்கின்றோம்.
ஆனால், இன்றும் பசுவதை தொடர்கிறது. அதிலும் மாமிசம் உண்பதை விட இன்னமும், கொடுமை என்னவென்றால் நெருப்பால் சுடுதல், மற்றும் நலமடித்தல் செயற்பாடுகள்.
இந்த கொடுமையான செயற்பாடுகளால் பசுக்கள் சொல்லனா துன்பங்களை அனுபவித்து வருகின்றனர்.
பசுக்களுக்கு சிறிய உயிரினங்களால் பாதிக்கப்பட கூடாது என்பதுக்காகவே ஆவுரஞ்சி கைகளை நாம் வைத்தோம். இந்த செயற்பாடுகளை நாம் மூட நம்பிக்கை மூலம் மட்டுமே செய்து வருகின்றோம்.
அத்துடன் தைப்பொங்கல் மற்றும் தைப்பூசம் தினத்தில் பசுக்களை பாதுகாக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பிக்கவுள்ளோம் என தெரிவித்துள்ளனர்.
யாழில் பட்டத்திருவிழாவை இம்முறை நடத்த வேண்டாம்! சிவாஜிலிங்கம்