மாபெரும் கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும்! விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை

Red Virus and blue DNA strand – medical 3D illustration with dark blue background

நாட்டில் கடந்த வாரம் இடம்பெற்ற கொண்டாட்டங்கள், மக்களின் பொறுப்பற்ற விதத்திலான நடவடிக்கைகளால் எதிர்வரும் சில வாரங்களில் பாரிய கொரோனா அலையை இலங்கை எதிர்கொள்ள நேரிடும் என்று இலங்கை விசேட வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில் அந்தச் சங்கம் விடுத்துள்ள அறிக்கையில்,

தடுப்பூசி பெற்றுக்கொள்ளல், முகக்கவசம் அணிதல், சமூக இடைவெளியைப் பேணுதல் என்பவற்றின் மூலமாகவே இந்த அபாயத்திலிருந்து மீள முடியும்.

முழுமையாகத் தடுப்பூசிகளைப் பெற்றுக்கொண்டுள்ள போதிலும், மேற்கூறப்பட்ட அடிப்படை சுகாதார வழிகாட்டல்களைப் பின்பற்ற வேண்டியது அத்தியாவசியமானதாகும். இதன் மூலமே எம்மைப் பாதுகாத்துக்கொள்ள முடியும்.

ஒமிக்ரான் பிறழ்வானது டெல்டாவை விட வீரியம் குறைவானதாகக் காணப்பட்டாலும் வேகமாகப் பரவும் திறனைக் கொண்டுள்ளது.

இதனால் கொரோனாத் தொற்றாளர்கள் சடுதியாக அதிகரிக்கும் போது வைத்தியசாலை கட்டமைப்புக்களும் நெருக்கடிகளை எதிர்கொள்ள நேரிடும்.

வைத்தியசாலை ஊழியர்கள் தொற்றுக்குள்ளாகி அவர்கள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டால் மருத்துவ சேவையும் மந்தமடையும் என்றுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *