நாட்டுக்காக சரியான பொறுப்பையும் கடமையையும் நிறைவேற்ற அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
புதிய ஆண்டை முன்னிட்டு நாடாளுமன்ற அதிகாரிகள் சத்தியப் பிரமாணம் செய்துக்கொள்ளும் நிகழ்வில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
இந்த நிகழ்வு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்றது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் நாடு பல சவால்களை எதிர்நோக்க நேரிட்டது. நாடு எதிர்நோக்கும் சவால்களை வெல்ல அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
புதிய சட்டமூலம் நிறைவேற்றும் வரை மாகாணசபைத் தேர்தலை நடத்த முடியாது! தினேஸ் குணவர்தன