சீன சேதன பசளை விவகாரம்; மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடை நீக்கம்!

சீன உர நிறுவனத்திற்கு கொடுப்பனவு செலுத்த மக்கள் வங்கிக்கு விதிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை நீக்கப்பட்டது.

தீங்கு விளைவிக்கும் பக்டீரியா அடங்கிய சர்ச்சைக்குரிய சேதன பசளையை நாட்டிற்கு கொண்டு வந்ததாக கூறப்படும் சீன உர நிறுவனத்திற்கும், அதன் உள்நாட்டு முகவருக்கும் கொடுப்பனவு வழங்குவதற்கு, கொழும்பு வணிக மேல்நீதிமன்றினால் மக்கள் வங்கிக்குப் பிறப்பிக்கப்பட்டிருந்த இடைக்காலத் தடை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், குறித்த சீன நிறுவனத்திற்கும் அதன் உள்நாட்டு முகவருக்கும் பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துமாறு கோரி மக்கள் வங்கியிற்கு எதிராக பிறப்பிக்கப்பட்டிருந்த வழக்கை இன்று கொழும்பு வர்த்தக நீதிமன்றம் முடிவுக்கு கொண்டுவந்துள்ளது.

அதனடிப்படையில், பணம் செலுத்துவதை தடுத்து நிறுத்துவதற்கான தடை உத்தரவை நீக்குவதற்கு கொழும்பு வர்த்தக நீதிமன்ற நீதிபதி பிரதீப ஹெட்டியாராச்சி உத்தரவிட்டுள்ளார்.

இலங்கையில் 15 வயதிற்கு மேற்பட்ட சகலருக்கும் இலத்திரனியல் அடையாள அட்டை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *