இன்று ஆரம்பமாகவுள்ள கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவுக்கான இறுதிக்கட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் முக்கிய கலந்துரையாடல் கல்முனை மாநகர முதல்வர் செயலக கேட்போர் கூடத்தில் நேற்று திங்கட்கிழமை(3) இரவு நடைபெற்றது.
திகாமடுல்ல மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம்.ஹரீஸ், மாநகர முதல்வர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப், பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூர், ஆணையாளர் எம்.சி.அன்சார், மாநகர சபை உறுப்பினர் எம்.எஸ்.எம்.நிசார், மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் உள்ளிட்டோர் இதில் பங்கேற்றிருந்தனர்.
கல்முனை கடற்கரைப் பள்ளி நாகூர் ஆண்டகை தர்ஹாவின் 200 ஆவது வருடாந்த கொடியேற்ற விழாவானது இம்முறை விசேடமாக அரச வர்த்தமானி பத்திரிகை மூலம் தேசிய கலாசார விழாவாக அங்கீகரிக்கப்பட்டு, அமைச்சர்களின் பங்குபற்றுதலுடன் நினைவு முத்திரை வெளியீட்டுடன் கொண்டாடப்படவுள்ள நிலையில், அதற்கு கல்முனை மாநகர சபை முழுமையான ஒத்துழைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.