அறுவடையின் பின் கொழும்பில் யாசகம் தான் எடுக்க வேண்டும்! விவசாயிகள் ஆவேசம்

அறுவடையின் பின்னர் கொழும்பில் யாசகம் தான் எடுக்க வேண்டும் என வீரமா நகர் பகுதி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.

திருகோணமலை – தோப்பூர் கமநல சேவை பிரிவுக்குட்பட்ட வீரமா நகர் பகுதியில் உள்ள தேவப் பெருமால் வெளி, காயன்கேணி வெளிகளில் சுமார் 480 ஏக்கரில் வேளாண்மை செய்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் யூரியா பசளையில்லாமையால் வேளாண்மைகள் வளர்ச்சியின்றி, மஞ்சல் நிறமாக காணப்படுவதாக விவசாயிகள் கவலை தெரிவிக்கின்றனர் .

அரசாங்கத்தால் யூரியா பசளைக்கு பதிலாக தரப்படுகின்ற எண்ணெய்யை வயலுக்கு விசிறானால் நாய்கள் வந்து வேளாண்மைகளை உண்ணுகின்றன.

அது நாற்றமுடையதாக இருப்பதாகவும் அவ் எண்ணெய் பிரயோசனமில்லையெனவும் விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

இலங்கை அரசாங்கமானது உலகத்திலேயே விசித்திரமான அரசாங்கமாக உள்ளது.

யூரியாவை உடனடியாக நிறுத்தி, சேதனப் பசளை மூலமாக அந்த வருடமே விவசாயம் செய்யச் சொல்வது அடி முட்டாள்தனமான செயற்பாடாகும்.

எமது பிரதேசம் பழங்குடியின மக்கள் வாழ்கின்ற பிரதேசமாகும்.

இங்குள்ளவர்களில் 20 வீதமானோர் யாசகம் பெறுகின்ற தொழில் செய்கின்றவர்கள்.

இந்த அறுவடை செய்த பின்னர் 100 வீதமானோரும் கொழும்புக்குச் சென்று பிச்சையெடுக்க வேண்டும்.

அப்போதுதான் கொழும்பிலுள்ள அரசாங்கத்திற்கு விவசாயிகளின் பிரச்சினை புரியும்.

எனவே விவசாயிகள் யூரியா பசளை இல்லாமல் மிகுந்த கஷ்டங்களை எதிர்நோக்கி வருகின்றனர்.

இதனால் அரசாங்கம் யூரியா பசளையை தந்துதவ நடவடிக்கை எடுக்க வேண்டுமென வீரமா நகர் விவசாயிகள் கோரிக்கை விடுக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *