
நாட்டில் கல்வி, மீன்பிடி மற்றும் விவசாயம் ஆகிய துறைகள் எந்த காரணத்துக்காகவும் பாதிக்கப்பட கூடாது என்பதில் நாம் கவனமாக உள்ளோம் என கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும், கல்வி மிகவும் மதிப்பு வாய்ந்தது. எத்தனை பேரிடர்கள் வந்தாலும் ஒருவருடைய கல்வி வளத்தை அழிக்க முடியாது.
எனவே, எத்தகைய சிரமம் வந்தாலும், குழந்தைகளை கல்விக்கு வழிநடத்தி, எதிர்காலத்தை வலுப்படுத்த வேண்டும். அதற்காக எங்களால் முடிந்த அனைத்தையும் செய்வோம்.
நாங்கள் விவசாயத்திற்காக கடுமையாக உழைத்து வருகிறோம். அத்துடன் மீனவ சமூகம் இந்தத் தொழிலில் அதிக முயற்சியையும் ஆற்றலையும் செலுத்துகிறது.
அந்நியச் செலாவணியை நம் நாட்டிற்கு கொண்டு வருவதற்கு இது பெரும் பலமாக இருக்கும். உலகில் நம் நாட்டு மீன் வளத்திற்கு அதிக தேவை உள்ளது.
நமது நாட்டு மீன்வளம் மிகவும் சுவையானது என்று ஐரோப்பிய நாடுகள்கூறுகின்றன. எனவே, அந்நியச் செலாவணியை ஈட்டுவதில் மீன் வளம் நமக்கு பெரும் உதவியாக உள்ளது.
உலகில் எங்களுக்கான சந்தை தேவை அதிகம். எனவே, திட்டத்தை மேம்படுத்த தேவையான நிதி உதவிகளை வழங்குவதற்காக இன்று தொடங்கப்படும் இந்த சிறிய கிராமங்களுக்கு நிவாரணம் வழங்க ஸ்டேட் வங்கிகளுடன் இணைந்து செயல்படுகிறோம் என தெரிவித்துள்ளார்.