சுசிலை பதவி நீக்குவது தற்போதுள்ள பிரச்சினைகளுக்கு தீர்வாகாது! மைத்திரி

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு சுசில் பிரேமஜயந்தவை பதவி நீக்குவதனால் தீர்வு கிட்டாது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தை விமர்சித்து பேசிய 24 மணித்தியாலங்களின் பின்னர் அவரது அமைச்சுப் பதவி ஜனாதிபதியினால் நீக்கப்பட்டுள்ளது.

விமர்சனம் செய்ததற்காக சுசில் பிரேமஜயந்தவை நீக்கியவர்கள், அரசை தொடர்ந்து அதிகமாக விமர்சித்துவரும் நிமல் லன்சாவிற்கு எதிராக ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.

தவறுகளை திருத்திக் கொண்டு, மக்களின் பிரச்சினையைத் தீர்த்தால் அரசாங்கத்தினால் முன்னோக்கிச் செல்ல முடியும்.

நாடு முழுவதும் வீடுகளில் எரிவாயு வெடிப்பு சம்பவங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தவறியதற்காக அவர் அரசாங்கத்திற்கு கண்டனமும் தெரிவித்தார்.

ஜனநாயகம் இல்லாத அணியில் இருக்க வேண்டாம்: சுசிலுக்கு சஜித் அணி அழைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *