நித்திரையில் இருந்து எழுந்தவர் போல் செயற்படும் பசில்! காவிந்த ஜயவர்தன குற்றச்சாட்டு

தற்போது இந்த நாடு பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ளது, பணவீக்கத்தால் அனைத்து பொருட்களின் விலையும் மும்மடங்கு உயர்ந்துள்ளதுள்ளன. நித்திரையில் இருந்து எழுந்தவர் போன்று நிதி அமைச்சர் அமெரிக்காவில் இருந்து வந்து 5000 ரூபா வழங்குவதாக அறிவித்துள்ளார் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் வைத்தியர் காவிந்த ஜயவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பு – மார்கஸ் பெர்னாண்டோ மாவத்தையில் அமைந்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,

இது மகிழ்ச்சியான செய்தி தான். பொருளாதார பிரச்சினையை வெறும் 5,000 ரூபாவால் அணைக்க முயன்றால் அப்பாவி மக்களுக்கு நீதி கிடைக்காது.

நாட்டில் 1.5 மில்லியன் அரச ஊழியர்கள் உள்ளனர். இந்நாட்டில் 650,000 ஓய்வு பெற்றவர்கள் உள்ளனர். 2.2 மில்லியன் சமுர்த்தி பெற்றவர்கள் உள்ளனர். சகலரையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவர்கள் பியகம பணம் அச்சிடும் இயந்திரத்தில் பணம் அச்சிடுகின்றனர்.

இலை பறிக்கும் பெண் மற்றும் சுற்றுலாத்துறையில் ஈடுபடும் அப்பாவி மக்களுக்கு என்ன நடந்துள்ளது? நெசவுத் தொழிலில் ஈடுபட்டுள்ளவர்களின் கதி என்ன? இந்த நாட்டில் உள்ள அப்பாவி மக்களின் பசியும், ஊடகவியலாளர்களின் பசியும் இந்த அரசாங்கத்துக்குப் புரியவில்லையா?

எனவே, இந்த மாயாஜாலத்தை செய்யாதீர்கள் என்கிறோம். இந்த நாட்டில் பண இயந்திரம் இருக்கும் வரை அச்சுப் பணம் விநியோகிக்கப்படும், ஆனால் அது ஒரு பகுதிக்கு மட்டுமே விநியோகிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மட்டு. கொடூரமாக வெட்டி படுகொலை செய்யப்பட்ட பெண்ணின் வழக்கு ஒத்திவைப்பு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *