
யாழ்ப்பாண மாவட்டத்தில் வெள்ளம் மற்றும் காற்றினால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு மெசிடோ நிறுவனத்தினால் இன்றையதினம் நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
வடக்கு மாகாணத்தில் பாதிக்கப்பட்ட 2,000 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகளை வழங்கும் மெசிடோ நிறுவனத்தின் நிவாரணப்பணி தொடர்ச்சாயாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்த வகையில் இன்றையதினம் யாழ்ப்பாணம் – நாவாந்துறை சென்நீக்கிலஸ் மகளிர் மன்றத்தில் வைத்து 160 குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக யாழ். மாவட்டத்தில் நாளைய தினமும் நிவாரண பொதிகள் வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

