
அமைச்சரவை அமைச்சராக இருந்து கொண்டு மாறுபட்ட கருத்தைக் கூற முடியாது போனால் அது தனது அரசியலுக்குப் பாதகமாக அமையும் என அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
இராஜாங்க அமைச்சர் பதவியில் இருந்து சுசில் பிரேமஜயந்தவை நீக்கியமை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும், இதுபோன்ற நடவடிக்கை மனச்சாட்சிக்கு எதிரானது என்றும், அவ்வாறு கருத்து தெரிவிப்பது தவறு என்று யாராவது கூறினால் விவாதிக்கலாம் என்றும் அவர் தெரிவித்தார்.
யாழில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மீனவ குடும்பங்களுக்கு நிவாரண பொதிகள் வழங்கிவைப்பு