
இராஜாங்க அமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவியிலிருந்து நீக்கப்பட்டதையடுத்து, அவர் அமைச்சின் காரியாலத்திலிருந்து முச்சக்கரவண்டியின் ஊடாக வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளார்.
தன்னிடம் இருந்த வாகனங்கள் மற்றும் பொருட்கள் அனைத்தையும் அமைச்சிடம் ஒப்படைத்துள்ளதாகவும், நீதிமன்றம் சென்று மீண்டும் வாகனமொன்றை பெற்றுக்கொள்ள எதிர்ப்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அவர், “வாகனங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விட்டேன். பொருட்களையும் ஒப்படைத்து விட்டேன். முச்சக்கர வண்டியிலேயே வீட்டுக்கு செல்கிறேன். ஆனால் நீதிமன்றத்துக்கு சென்று வாகனமொன்றை பெற்றுக்கொள்வேன்.
நீதிமன்றத்துக்கு சென்று சில நாட்கள் செல்லும்போது வாகனமொன்றை சொந்தமாக பெற்றுக்கொள்ள முடியும். நான் எதனையும் திருட போதில்லை. நீதிமன்றம் சென்று எனது தொழிலை செய்து வாகனமொன்றை பெற்றுக்கொள்வேன். சிறந்த எதிர்காலம் உருவாகட்டும்“ என்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போது அவர் சுட்டிக்காட்டியுள்ளாா்.
