
இதுவரை பின்பற்றப்பட்ட நடைமுறைகளுக்கு அமைய வைத்திய அதிகாரிகளின் இடமாற்றங்களை வழங்குமாறு பிரதமர் மஹிந்த ராஜபக்ச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
குறிப்பிட்ட சில அதிகாரிகளின் விருப்பத்திற்கேற்ப இடமாற்ற நடைமுறைகளை மாற்றியமைப்பதன் காரணமாக இந்த நெருக்கடி ஏற்படுவதாக பிரதமர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளுடன் பிரதமர் இன்று கலந்துரையாடியுள்ளார். இந்த கலந்துரையாடலில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கமும் கலந்துகொண்டுள்ளது.
அரசியல் சித்தாந்தங்களைப் பின்பற்றி அவர்களை சங்கடப்படுத்தாமல் தொழிற்சங்கங்களுடன் இணைந்து ஸ்தாபன சட்டத்தின் பிரகாரம் செயற்பட வேண்டுமென பிரதமர் தெரிவித்துள்ளார்.
இக்கலந்துரையாடலின் போது மருத்துவ நிருவாகத்தை சிரேஷ்டம், இளையவர் என இரு பிரிவாகப் பிரிக்காமல் ஒரே மாதிரியாக வைத்திருக்க வேண்டுமென அரச வைத்திய அதிகாரிகள் சங்கம் பரிந்துரைத்துள்ளது.
அமைச்சர்களிடம் ஒழுக்கம் இல்லாமல் மக்களிடம் ஒழுக்கத்தை கட்டியெழுப்ப முடியாது! ஜோன்ஸ்டன் தெரிவிப்பு





