
நட்சத்திர விடுதியில் குளிரூட்டிக்கான வாயு வெடித்ததில் இளைஞர் ஒருவர் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கண்டி – இரண்டாவது ராஜசிங்க மாவத்தையிலுள்ள விடுதியில் இன்று குளிரூட்டிக்கான வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த தருணத்தில், இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.
வெடிப்பு சம்பவத்தில் தீ காயங்களுக்கு உள்ளான இளைஞன், பேராதனை போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக தெரியவருகின்றது.
குளிரூட்டி வாயு திருத்தப் பணிகளில் ஈடுபட்டிருந்த நிலையில், பழுதுபார்த்த பராமரிப்பு ஊழியர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்தார்.
இதுதொடர்பில், விசாரணைகளை கண்டி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





