இந்தியா – தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான மூன்றாம் நாள் ஆட்டம் இன்று!

இந்தியா மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று இடம்பெறவுள்ளது.

போட்டியில் தமது இரண்டாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிவரும் இந்திய அணி 2 விக்கெட்களை இழந்து 85 ஓட்டங்களை பெற்றுக்கொண்டுள்ளது.

அவ்வணி சார்பாக புஜாரா 35 ஓட்டங்களுடனும் ரஹானே 11 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காது உள்ளனர்.

முன்னதாக தமது முதலாவது இன்னிங்சிற்காக துடுப்பாடிய தென்னாபிரிக்க அணி அனைத்து விக்கெட்களையும் இழந்து 229 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி தமது முதலாவது இன்னிங்சிற்காக சகல விக்கெட்டுக்களையும் இழந்து 202 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *