கிளென் மெக்ஸ்வெல்லுக்கு கொரோனா தொற்று

அவுஸ்ரேலிய கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் கிளென் மெக்ஸ்வெல் இன்று புதன்கிழமை கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

பிக் பாஷ் லீக் உரிமையாளரான மெல்போர்ன் ஸ்டார்ஸ் இந்த தகவலை உறுதிப்படுத்தி அறிக்கை வெளியிட்டுள்ளது.

மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணித் தலைவரான மெக்ஸ்வெலுக்கு இன்று மேற்கொள்ளப்பட்ட ஆன்டிஜென் பரிசோதனைகளில் கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

தற்சமயம் பி.சி.ஆர். சோதனைகளுக்கும் உட்படுத்தப்பட்டுள்ளார் என்றும் அதன் முடிவுகளுக்காகக் காத்திருப்பதாகவும் அறிக்கை தெரிவிக்கின்றது.

க்ளென் மெக்ஸ்வெல், கொரோனா தொற்று உறுதியான 13 ஆவது மெல்போர்ன் ஸ்டார்ஸ் அணி வீரர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *