அரசுக்கு எதிரான கருத்துக்கள் கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும்! திலும் அமுனுகம

அமைச்சரவையில் இருக்கும் போது ஒரு கருத்தையும், வெளியில் இன்னொரு கருத்தையும் வெளியிடுவது சில அமைச்சர்களின் கூட்டுப் பொறுப்பை மீறும் செயலாகும் என இராஜாங்க அமைச்சரான திலும் அமுனுகம தெரிவித்துள்ளார்.

கண்டியில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அமைச்சரவை தீர்மானங்களுக்கு இணங்கி வேறு இடங்களில் உடன்படாத நபர்கள் அமைச்சரவையை விட்டு வெளியேற வேண்டும் என ஜனாதிபதி கருதுகின்றார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் கருத்து வேறுபாடு இருப்பின், எந்தவொரு தனிநபரும் கூட்டு அமைச்சரவை முடிவுகளை ஏற்க முடியாது.

அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மை தேவை இல்லையா என ஊடகவியலாளர்கள் வினவியபோது,

பெரும்பான்மையை தக்கவைத்துக் கொள்வதற்காக பல்வேறு கோரிக்கைகளை அவர்களால் கடைப்பிடிக்க முடியாது. தனிப் பெரும்பான்மையுடன் கூட ஆட்சியமைக்க முடியும்.

மேலும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கருத்து தொடர்பில் கருத்து தெரிவித்த அவர்,

முன்னாள் ஜனாதிபதியின் செயற்பாடுகளினால் நாடு தற்போதைய நிலைமையை எதிர்நோக்கியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி சிறிசேன விமர்சனங்கள் மற்றும் கருத்துக்களை தெரிவித்தால், அவர் நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும் என அவர் தெரிவித்துள்ளார்.

பாரிய வெடிகுண்டை இரும்பிற்காக கடத்தி செல்ல முற்பட்ட அறுவர் கைது!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *