
கொரோனா தொற்று நோய் மற்றும் தற்போதைய வெள்ள அனர்த்தம் காரணமாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உலர் உணவு பொதிகளை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றுள்ளது.
குறித்த நிகழ்வு, பெரிய நீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் ஏற்பாட்டில் இன்று (05) கல்முனை வொலிவோரியன் வீட்டுத்திட்ட ஹிஜ்ரா பள்ளிவாசலில் இடம்பெற்றது.
விசேட அதிரடிப் படையினரின் பிரதிப் பொலிஸ்மா அதிபர் வருண ஜயசுந்தர, அம்பாறை வலயக் கட்டளை அதிகாரி சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜே.ஆர் சேனாதீர, மாவட்ட கட்டளை அதிகாரி டி.சி ஜெயவிடவிதாண ஆகியோரது ஆலோசனை வழிகாட்டலுக்கடைய பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு உதவிக்கரம் நீட்டும் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் ஒரு கட்டமாக இந்த வேலைத்திட்டம் இன்று சாய்ந்தமருது பிரதேசத்தில் முன்னெடுக்கப்பட்டது.
பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை முகாம் பொறுப்பதிகாரி ஆர்.ஏ.சி.டி.ஏ ரத்நாயக்க, பதில் பொறுப்பதிகாரி எஸ்.எம்.பி.பி.எம். டயஸ் , சிறுவர் மற்றும் இளைஞர்களை பாதுகாக்கும் சமூக ஸ்தாபனத்தின் தலைவர் பி(B). சர்மில் ஜஹான் ஆகியோர் கலந்து கொண்டு பொதுமக்களுக்கான உலர் உணவுப் பொதிகளை வழங்கிவைத்தனர்.