அமைச்சரவையில் 60 வீத மாற்றம்: ஜனாதிபதியின் முடிவு

அடுத்த சில தினங்களுக்குள் அமைச்சரவையில் பாரிய மாற்றங்களை செய்ய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச (Gotabaya Rajapaksa) தீர்மானித்துள்ளார். இதனடிப்படையில், அமைச்சரவையில் 60 வீதமான மாற்றங்கள் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

எவ்வாறாயினும் அமைச்சரவையில் புதிதாக எவருக்கும் இடமளிக்கப்பட மாட்டாது என்பதுடன் தற்போது அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்களை செய்ய ஜனாதிபதி தீர்மானித்துள்ளார்.

சுசில் பிரேமஜயந்தவின் பதவி நீக்கம் காரணமாக ஏற்பட்டுள்ள வெற்றிடத்திற்கு ராஜாங்க அமைச்சர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதுடன் மேலும் சில ராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *