கிளிநொச்சியில் எரிவாயு வெடிப்பு சம்பவம்

கிளிநொச்சி கண்டாவளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பிரமந்தனாறு மயில்வாகனபுரம் பகுதியில் (06) இன்றையதினம் எரிவாயூ அடுப்பு வெடிப்பு இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் இன்று மதியம் 2.30 மணியளவில், சமையல் செய்து கொண்டிருக்கையில் இடம்பெற்றுள்ளது.

திடீர் என சத்தம்கேட்டதையடுத்து வீட்டிலிருந்து வெளியில் ஒடிவந்ததாகவும், பின்னர் தனது கணவருக்கு தொலைபேசி மூலம் தகவல் வழங்கியதாகவும் பெண்மணி தெரிவித்துள்ளார்.

அதனையடுத்து உடன் வீட்டுக்குவந்த கணவன் அடுப்பின் ரேகுலொட்டரை அகற்றிவிட்டு, பின்னர் தருமபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கியுள்ளார்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற பொலிசார் அடுப்பு வெடிப்பு தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டனர்.

பின்னர் தடையவியல் பொலிசாரும் சம்பவம் தொடர்பாக விசாரணைகள் மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்க விடையமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *