மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரர் சிவபூமி திருமந்திர அரண்மனை நேற்று திறந்து வைக்கப்பட்டது.
திருமந்திர அரண்மனையின் மூலமூர்த்தியாக முகலிங்கப் பெருமான் கருங்கற் கோவிலில் காட்சியளிக்கிறார்.
திருமந்திரப் பாடல் முழுவதும் கருங்கல்லில் கையால் உளிகொண்டு செதுக்கப்பட்டு காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
21 அடி உயரமான நிலையான இரதம். அதில் சிவனும் திருமூலரும் எழுந்தருளியிருக்கும் காட்சி, கருங்கல்லில் உருவாக்கப்பட்ட 108 சிவலிங்கங்கள் அரண்மனை பிரகாரத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டு, அடியார்கள் அனைவரும் தங்கள் கரங்களால் அபிஷேகம் செய்வதற்கு வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
108 சிவலிங்கங்கள் ஒரேயிடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருப்பதும் கொக்கட்டிசோலை சிவபூமி திருமந்திர அரண்மனையின் சிறப்பு அம்சமாகும்.