மைனரு வேட்டி கட்டி என்ன பார்த்து நச்சுனு கண்ணடிச்சான்… செம்ம கியூட்டாக குத்தாட்டம் போட்டு அசத்திய பிக்பாஸ் ஜனனி! வைரல் வீடியோ samugammedia

பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்கள் மனதில் இடம்பிடித்தவர் ஜனனி. ஸ்ரீலங்காவை பூர்விகமாக கொண்ட ஜனனி அங்குள்ள பிரபல சேனலில் தொகுப்பாளராக பணியாற்றி வந்தவர்.

இவருக்கு லாஸ்லியா போலவே பிக் பாஸ் நிகழ்ச்சி 6வது சீசனில் வாய்ப்பு வரவே உடனே ஓகே சொல்லி நிகழ்ச்சியில் களம் இறங்கினார். 

இந்த நிகழ்ச்சியில் ஜனனி தனது முழு விளையாட்டை காண்பித்து மக்கள் மனதில் இடமும் பிடித்தார். பல போட்டியாளர்களை நேருக்கு நேர் சந்தித்து, பொம்மை டாஸ்க், பேக்கரி டாஸ்கில் என எல்லா டாஸ்க்கிலும் பட்டையை கிளப்பினார் ஜனனி. 

வாராம் தோறும் இவர் நாமினேட் ஆகினாலும் மக்களால் காப்பாற்றப்பட்டு விடுவார். அந்தளவுக்கு ஜனனிக்கு ரசிகர்கள் படை உள்ளது. 

இறுதி வரை வருவார் என்று ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் குறைவான வாக்குகளை பெற்று எதிர்பாராத விதமாக வீட்டை விட்டு வெளியேறினார்.

இது ஜனனியின் ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 

ஜனனி வீட்டில் செய்யும் சின்ன சின்ன விஷயங்கள் கூட ரசிகர்களால் அதிகளவு ரசிக்கப்பட்டு ஷேர் செய்யப்பட்டு வருகிறது.

தற்போது ஜனனி தளபதி விஜயின் 67வது படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது.

இவர் தற்போது இன்ஸ்டாகிராமில் ட்ரெண்ட் ஆகி வரும் மைனரு வேட்டி கட்டி பாடலுக்கு செம்ம கியூட்டாக குத்தாட்டம் போட்டு அசத்தியுள்ளார்.

இந்த வீடியோ ரசிகர்களிடம் நல்ல வரவேற்பினை பெற்றுள்ளது. 

வீடியோவில் ஜனனி செம்ம கியூட்டாக நடனமாடி உள்ளதாக ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *