எம்.பிக்கள் தொடர்பில் மக்கள் அதிருப்தி! – கிராமத்துக்குச் செல்லும் நாடாளுமன்றம் samugammedia

நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் மக்களுக்கு அதிருப்தி உள்ளதால் நாடாளுமன்றத்தைக் கிராமங்களுக்கு எடுத்துச் செல்லும் வேலைத்திட்டத்தைத் தொடங்கவுள்ளார் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க.

மக்களின் காலடிக்குச் சென்று எம்.பிக்கள் செய்து வருகின்ற வேலைகளை மக்களுக்குத் தெளிவுபடுத்துவதும் அவர்களின் யோசனைகளை உள்வாங்கிச் செயற்படுவதுமே இதன் நோக்கம்.

இதற்கான வேலைத்திட்டத்தை வரையும் பொறுப்பை அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவிடம் ஜனாதிபதி ஒப்படைத்துள்ளார்.

வருகின்ற சித்திரைப் புதுவருடத்தில் எம்.பிக்களையும் கல்விமான்களையும் ஒன்றிணைத்துக் களமிறக்குவதற்காக வேலைத்திட்டம் ஒன்றைத் தயாரித்து வருகின்றார் அமைச்சர் பிரசன்ன.

Leave a Reply