முல்லையில் மாட்டுவண்டி சவாரி போட்டியில் சீறிப் பாய்ந்த மன்னார் காளைகள்..! மூன்று பிரிவுகளில் முதலிடம்..!samugammedia

தமிழர்களின் பாரம்பரிய விளையாட்டுக்களில் மாட்டுவண்டி சவாரி போட்டியும் ஒன்றாகும் வன்னி பகுதியில் ஆண்டு தோறும் இடம் பெற்று வந்த மாட்டுவண்டி சவாரி போட்டிகள் யுத்தம் காரணமாக நீண்ட காலம் இடம் பெறாத நிலையில் முல்லைத்தீவு (விஸ்வமடு) மாவட்ட மாட்டுவண்டி சவாரி சங்கத்தின் ஒழுங்கமைப்பில் வடமாகாண காளைகளை ஒன்றினைத்து முல்லைத்தீவில் குறித்த போட்டி இடம் பெற்றது

குறித்த போட்டியில் மன்னார் மாவட்டத்தில் இருந்து பங்கு பற்றிய காளைகள் A,B,C ஆகிய மூன்று பிரிவுகளிலும் முதலாம் இரண்டாம் மூன்றாம் இடங்களை பெற்று கொண்டுள்ளது.
உயிலங்குளம் பகுதியை சேர்ந்த றோமையா வின் காளைகளே குறித்த மூன்று பிரிவுகளிலும் வெற்றி பெற்றுள்ளது.
குறித்த போட்டியில் வெற்றி பெற்ற காளைகளில் உரிமையாளர்களுக்கு பெறுமதி மிக்க பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டது.

Leave a Reply