ஐஓசி எரிபொருள் விலை தொடர்பில் முக்கிய அறிவிப்பு samugammedia

சிலோன் ஐஓசி நிறுவனமும் இன்று (29) இரவு முதல் இலங்கை பெட்ரோலியம் சட்டப்பூர்வ கூட்டுத்தாபனத்தின் விலைக்கு ஏற்ப எரிபொருள் விலையில் திருத்தம் செய்துள்ளது.

அதனடிப்படையில் 92 ஒக்டேன் பெட்ரோலின் விலை 60 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 340 ரூபாவாகும்.

அத்துடன் 95 ஒக்டேன் பெட்ரோலின் விலை 135 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 375 ரூபாவாகும்.

மேலும் சுப்பர் டீசலின் விலை 45 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 465 ரூபாவாகும்.

ஒட்டோ டீசலின் விலை 80 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 325 ரூபாவாகும்.

இதேவேளை மண்ணெண்ணை விலை 10 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதுடன் அதன் புதிய விலை 295 ரூபாவாகும்.

Leave a Reply