பேருந்து கட்டணம் எவ்வளவு குறைக்கப்படும் – புதிய பட்டியல் வெளியானது! samugammedia

நாளை நள்ளிரவு முதல் பேருந்து கட்டணம் 12.9 சதவீதத்தால் குறைக்கப்படும் என பதில் போக்குவரத்து அமைச்சர் லசந்த அழகியவண்ண தெரிவித்துள்ளார்.

அத்துடன், தற்போதைய குறைந்தபட்ச பேருந்து கட்டணத்தை நாளை நள்ளிரவு முதல் 34 ரூபாவிலிருந்து 30 ரூபாவாக குறைக்குமாறு பதில் போக்குவரத்து அமைச்சர் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவிற்கு பணிப்புரை விடுத்துள்ளார்.

எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள மாற்றத்தின் காரணமாக பேருந்து கட்டணம் குறைக்கப்பட்டுள்ளது.

இந்த பேருந்து கட்டண திருத்தம், அனைத்து தனியார் மற்றும் அரச பேருந்துகளுக்கும் பொருந்துமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply