திருட்டை தடுப்பதற்கு மண்டைதீவில் சோதனை முகாம் – டக்ளஸ் தலைமையில் தீர்மானம்! samugammedia

தீவகப் பகுதிகளில் இடம்பெறுகின்ற திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக, மண்டைதீவில் உள்ள சோதனை முகாமினை பலப்படுத்தி தீவு பகுதியில் இருந்து வெளியேறும் வாகனங்களை பரிசோதனை செய்வதன் மூலம் தீவுப் பகுதியில் இடம்பெறும் சட்டவிரோத செயல்களை கட்டுப்படுத்த முடியும் என இன்று யாழ்ப்பாண மாவட்ட செயலத்தில் இடம்பெற்ற குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் விசேட கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமைகளில் கட்டாயமாக இந்த சோதனை நடவடிக்கை இடம்பெற வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

புங்குடுதீவு பகுதியில் இருந்து படகுகள் மூலம் வேறு பகுதிகளுக்கு மாடு மற்றும் திருடப்படும் பொருட்கள் எடுத்துச் செல்லப்படுவதாக கலந்துரையாடலின் போது தெரிவிக்கப்பட்டிருந்தது.

எனவே கடற்படையினர் ஒத்துழைக்கவ வேண்டும் என கோரப்பட்டுள்ளது, தீவு பகுதியில் மாடுகள் கடத்தல் மற்றும் ஏனைய திருட்டு சம்பவங்களை கட்டுப்படுத்துவது தொடர்பில் இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட போது இந்த முடிவெடுக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *