பாடசாலைக்குரிய காணிகள் உத்தியோகபூர்வமாக கையளிப்பு! samugammedia

மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி(தேசிய பாடசாலை)பெண்கள் பிரிவு மற்றும் நற்பிட்டிமுனை லாபீர் வித்தியாலயம் ஆகிய இரு பாடசாலைகளுக்குமான காணிக் கையளிப்பு இன்று(29) கல்முனை பிரதேச செயலகத்தில் இடம்பெற்றது.

கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலியினால் உத்தியோகபூர்வமான முறையில் இரு பாடசாலைகளின் காணி பத்திரங்கள் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம். எஸ்.சஹுதுல் நஜீமிடம் கையளிக்கப்பட்டது.

இந் நிகழ்வில் கல்முனை பிரதேச செயலக காணிப்பிரிவு பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் எச்.எல்.எம் மபாஸ் மற்றும் காணி பயன்பாட்டு அபிவிருத்தி உத்தியோகத்தர் ஐ.எம் ஜெளபர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Leave a Reply