எதிரணியிலிருந்து 17 எம்.பிக்கள் 'பல்டி?' – மேலும் ஓங்குமா ரணிலின் கை samugammedia

ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தி கூட்டணியில் அங்கம் வகிக்கும் 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசுடன் இணைவதற்குப் பச்சைக்கொடி காட்டியுள்ளனர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கான பேச்சுகள் வெற்றியளித்துள்ளன என்று தகவல்கள் வெளியானாலும், இன்னும் உத்தியோகபூர்வமாக எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

எதிரணியில் இருந்து அரசு பக்கம் தாவும் 17 எம்.பிக்களும் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைவார்கள் என்றும் தெரியவருகின்றது.

அவர்களுள் தமிழ் முற்போக்குக் கூட்டணியின் எம்.பிக்கள் இருவரும், ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர்கள் சிலரும் அடங்குகின்றனர் என்றும் அறியமுடிகின்றது.

Leave a Reply