இது நாட்டில் ஒருபோதும் நடக்கக்கூடாது – எச்சரித்த மஹிந்த! samugammedia

தேர்தல் அறிவிக்கப்பட்ட திகதிகளில் இடம்பெறவில்லை எனில் அது பாரிய குற்றமாகும் என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தவிசாளர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

இவ்வாறான விடயங்கள் ஒரு நாட்டில் நடைபெறக்கூடாது என்றும் எதிர்வரும் ஓகஸ்ட் மாதம் தேர்தல் நடைபெறும் என எதிர்பார்ப்பதாக மஹிந்த தேசப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.

எந்தச் சூழ்நிலையிலும் சரியான நேரத்தில் தேர்தலை நடத்தாதது குற்றம். அதுவும் ஒரு சோகமான நிலை. இது ஒரு நாட்டில் நடக்கக் கூடாத ஒன்று. இந்தப் பிரச்னையை எப்படித் தீர்ப்பது என்பதுதான் இன்றைய பிரச்சினை.

தேர்தல் ஆணையம், நிதி அமைச்சகம், திறைசேரி ஆகிய மூன்றும் சேர்ந்தே இதற்கு தீர்வை காணவேண்டும் எனவும் அவர் தெரிவித்த்hர்.

Leave a Reply