முன்னாள் ஜனாதிபதிகளான மைத்திரிபால சிறிசேன மற்றும் கோட்டாபய ராஜபக்ச ஆகியோரை கொலை செய்ய சதி செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபரான நாலக சில்வா மீண்டும் சேவையில் அமர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் அவர் புத்தளம் பிரதேசத்திற்கு பொறுப்பான பிரதி பொலிஸ்மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.
நாமல் குமார என்பவரால் தாக்கல் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் பிரதி பொலிஸ்மா அதிபரான நாலக சில்வா, முன்னாள் ஜனாதிபதிகள் இருவரையும் கொலை செய்ய சதித்திட்டம் தீட்டப்பட்ட குற்றச்சாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.