தொடர்ந்து உயர்வடையும் தங்கம்

இலங்கையில் தங்கத்தின் விலை மீண்டும் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அதன்படி கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தையில் இன்று (30) காலை “22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை 163,800 ரூபாவாக அதிகரித்துள்ளது.

“22 கரட்” ஒரு பவுன் தங்கத்தின் விலை நேற்று (29) 161,000 ரூபாவாக இருந்த நிலையில் இன்று 2,800 ரூபாவால் இவ்வாறு அதிகரித்துள்ளது.’

இதனிடையே நேற்று (29) 175,000 ரூபாவாக இருந்த “24 கரட்” ஒரு பவுன் தங்கம் இன்றைய தினம் 178,000 ரூபாவாக அதிகரித்துள்ளதாக கொழும்பு செட்டியார் தெரு தங்க சந்தை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

The post தொடர்ந்து உயர்வடையும் தங்கம் appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply