வெடுக்குநாறி பிரைச்சினையை அரசியல் மயமாக்க வேண்டாம்- சிவசேனை உறுப்பினர் தம்பா வேண்டுகோள்! samugammedia

வெடுக்குநாறி பிரைச்சினையினை அரசியல் பிரைச்சினையாக மாற்றி அதிலிருந்து யாரும் அரசியல் செய்ய முற்பட வேண்டாமென சிவசேனை வவுனியா மாவட்ட உறுப்பினர்  தம்பா தெரிவித்துள்ளார். 

இன்று யாழ் ஊடக அமையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பின் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார். 

மேலும் அவர் தெரிவிக்கையில், 

வெடுக்குநாறி தொடர்பான பிரைச்சினையினை ஆரம்பத்திலிருந்தே அரசியல் பிரைச்சினையாக மாற்றி தற்பொழுது பூசை செய்ய முடியாத நிலையில் உள்ளோம். 

இதற்கு முன்னர் குறுந்தூர் மலை விவகாரமும் இவ்வாறு மேற்கொள்ளப்பட்டதால் அங்கு செல்ல முடியாத நிலையினை உருவாக்கிவிட்டனர்.

இவற்றுக்கு கச்சேரியில் இரு கூட்டங்களை ஏற்பாடு செய்ததுடன் அதில் ஒரு கூட்டத்தில்  பூசகருடன் சிலர் ஒன்றாக இணைந்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டோம்.

பின்னர்  GA  கூறியிருந்தார் ஜனாதிபதிக்கு அறியப்படுத்தியதாகவும் அதற்கு ஜனாதிபதி உடைத்த சிலையினை பொறுப்பேற்று அமைப்பதாகவும் கூறியிருந்தார்.  

அதனை நீதிமன்றத்தில் பலமான வழக்கில் உள்ளமையால் நாம் அதனை அமைக்கை முடியாத சூழ்நிலை காணப்படுகின்றது.  அதற்கு  அரசாங்க உத்தியோகத்தர்கள் அனைவரும் தீர்மானித்து வழக்கிற்கு திருப்பி 

நீதிமன்றத்தில் அப்பில் செய்தால் அதனை செய்யலாம். 

அத்துடன் அந்த காணிக்கு விண்ணப்பம் போடுமாறும் வன திணைக்களம் அதனை விடுவிப்பதற்கு சம்மதித்ததாகவும், தொல்பொருளியல் திணைக்களம் அழிக்காதவாறு திட்டத்தினை தருமாறும் பின்னர் கோயிலினை அமைத்து வழிபாடு செய்யுமாறும் கூறப்பட்டது. 

அதில் அரசாங்க அதிபர், வனப்பாதுகாப்பு  திணைக்களம், தொல்பொருளியல் திணைக்களம்  மற்றும் இந்து பௌத்த ,முஸ்லிம் ,காத்தலிக் என அனைவரும் இணைந்து சர்வமத கூட்டத்திற்கும் வெட்டுக்குநாறி தொடர்பான அமைப்புகளும் கலைந்துரையாளலிற்காக சென்றிருந்தோம். 

இந்த பிரைச்சினைகளை இடையில் வந்து யாரும் அரசியல் பிரைச்சினையாக்காது பூசை வழிபாடுகளிற்கு 

இடம் ஒதுக்கப்பட்டால் போதும். 

இதனை விட பெரிய பிரைச்சினையான குறுந்தூர்  மலை விவகாரத்திற்கு ஊர்வலம் போடாது வெடுக்குநாறி பிரைச்சினைக்கு எதற்காக ஊர்வலம் போடுகின்றனர்? அதனை யார் உடைத்தது என்பதை முதலில் கண்டு பிடியுங்கள். 

வெடுக்குநாறி பிரச்சினைக்கு அரசாங்கம் விரைவில் தீர்வு தரும் என நம்புகின்றோம். ஆகவே இதனை யாரு அரசியல் மயமாக்க வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார்.

 

Leave a Reply