பகிரங்க அழைப்பு விடுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

படுபயங்கரமான புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க அழைப்பு விடுத்துள்ளார்.

கொழும்பில் நேற்று மாலை நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“அரசு கொண்டுவரத் தீர்மானித்துள்ள புதிய பயங்கரவாதத் தடைச் சட்டமூலம் (Anti Terrorism Bill) படுபயங்கரமானது.” இந்தச் சட்டமூலம் அமுலானால் ஜனநாயகம் பற்றி கதைக்க முடியாது.

இப்படியான கூட்டங்களை நடத்தும் எம்மைக் கைது செய்யலாம். எனவே, இந்தச் சட்டமூலத்துக்கு எதிராக மக்கள் திரள வேண்டும்.” என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

The post பகிரங்க அழைப்பு விடுக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply