இலங்கையில் பின்தங்கிய மாணவர்களுக்கு உதவ வந்த வெளிநாட்டவருக்கு நேர்ந்த பரிதாபம்! samugammedia

பண்டாரவளையிலுள்ள பின்தங்கிய பாடசாலையொன்றின் மாணவர்களுக்கு கற்றல் உபகரணங்களை இலவசமாக வழங்குவதற்கு வந்த ஆங்கிலேயர் ஒருவர், மாணவர்களும் பெற்றோரும் பயன்படுத்திய கையடக்கத் தொலைபேசிகளைக் கண்டு அதிர்ச்சியடைந்ததாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பாடசாலையை தெரிவுசெய்தமைக்காக அதிருப்தியை வெளியிட்டுள்ள அவர், 

தனது கைபேசியை விட அதிக விலைகொண்டவற்றை மாணவர்களும் பெற்றோரும் பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

இலங்கையின் தற்போதைய நிலைமையை பிரித்தானிய ஊடகங்களின் ஊடாக அந்நாட்டுக் குழுவொன்று பின்தங்கிய பாடசாலையொன்றை தெரிவுசெய்து கற்றல் உபகரணங்களை வழங்குவதற்கு தீர்மானித்தது. 

அதன் பிரகாரம் பண்டாரவளையில் உள்ள பாடசாலையொன்றை தெரிவுசெய்யுமாறு விடுதியொன்றின் உரிமையாளரை ஆங்கிலேயர் ஒருவர் கோரியுள்ளார்.

விடுதி உரிமையாளரும் பண்டாரவளையில் உள்ள பின்தங்கிய பாடசாலையொன்றை தெரிவுசெய்து உரிய ஏற்பாடுகளை செய்துள்ளார். இலங்கைக்கு வந்த ஆங்கிலேயர்கள் குழு சுமார் மூன்று இலட்ச ரூபா பெறுமதியான கற்றல் உபகரணங்களை வாங்கிக்கொண்டு பாடசாலைக்குச் சென்றது.

அங்கு சிறிய விழாவொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மாணவர்களின் கலை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன. 

அதனை மாணவர்களும் பெற்றோரும் தமது கையடக்கத் தொலைபேசிகளில் படம், காணொளி எடுத்துள்ளனர். இறுதியாக ஆங்கிலேயருக்கு உரையாற்றுவதற்கான வாய்ப்பு வழங்கப்பட்டது.

இங்கே, மாணவர்களும் பெற்றோரும் பயன்படுத்தும் கையடக்கத் தொலைபேசிகளை பார்த்து வியக்கிறேன். விலை உயர்ந்த தொலைபேசிகள் அவை. இந்த மாணவர்கள் பொருளாதார நெருக்கடியில் இருப்பதாகத் தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

கையடக்கத் தொலைபேசிகள் ஒருவரது மதிப்பு மிக்க நேரத்தை வீணடிக்கிறது. அந்தத் தொலைபேசிகளிலிருந்து நல்லவற்றை மாத்திரமே நாம் பெற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *