மன்னாரில் களையிழந்த புத்தாண்டு கொண்டாட்டம்!samugammedia

நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி நிலை தொடர்சியாக காணப்படுகின்றமையால் பொருட்களின் விலை பெரிய அளவில் வீழ்சியடையாமையினால் மன்னார் மாவட்டத்தில் இவ் வருடமும் புத்தாண்டு கொண்டாட்டம் மற்றும் புத்தாண்டு வியாபாரம் களையிழந்து காணப்படுகின்றது

மக்கள் பொருள் கொள்வனவு மற்றும் ஆடை கொள்வனவில் அதிகளவு ஆர்வம் காட்டாத நிலையில் மன்னார் மாவட்டத்தில் வீதிகள் மற்றும் விற்பனை நிலையங்கள் பெரும்பாலும் வெறிச்சோடி காணப்படுகின்றமையையே அவதானிக்க கூடியதாக உள்ளது
அதே நேரம் மன்னார் மாவட்டத்தில் தொடர்சியாக கடும் வெப்பம் நிலவி வருகின்றமையினால் பெரும்பாலான மக்கள் வீடுகளிலே முடங்கி காணப்படுவதும் குறிப்பிடதக்கது.

Leave a Reply