இணுவில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மனிதநேயப் பணிகள் ஆரம்பம்! samugammedia

இன்றையதினம் இணுவில் கந்தன் அறக்கட்டளையும், நந்தாவில் நீங்காமூலை காளியாச்சி அறக்கட்டளையும், ஒருங்கிணைந்து, இணுவில் கந்தசுவாமி ஆலய மண்டபத்தில் மனிதநேயப் பணிகளை மேற்கொண்டன.

இதன் போது வறிய மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள், கோண்டாவில் ஆதார வைத்தியசாலைக்கு அத்தியாவசிய மருந்துப் பொருட்கள், பொருளாதாரத்தில் பின்தங்கிய, தந்தையை இழந்த பல்கலைக்கழக மாணவிகளுக்கு மடிக்கணினிகள் என்பன வழங்கி வைக்கப்பட்டன.

இவ் வைபவத்தில் சித்தங்கேணி அறக்கட்டளைகள் தலைவர் தி.ஜனார்த்தனன்,  யாழ் இந்துக்கல்லூரி முன்னாள் அதிபர் திரு.பஞ்சலிங்கம், ஜனாதிபதியின் மேலதிக செயலாளர் திரு.இ.இளங்கோவன், மானிப்பாய் இந்துக்கல்லூரி அதிபர் எஸ்.இளங்கோ, கணித ஆசான் திரு .பொ.மகேஸ்வரன் (திருநெல்வேலி ஆன்மீக அறக்கட்டளை தலைவர்), Dr. திலக் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.

Leave a Reply