அரசாங்கத்திற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்.!samugammedia

ஸ்ரீலங்கா டெலிகொம் நிறுவனத்தின், அரசாங்கத்திற்கு சொந்தமான பங்குகளை தனியாருக்கு விற்பனை செய்வதற்கு எதிராக, டெலிகொம் ஐக்கிய தொழிற்சங்கம் இன்று உச்ச நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்றை தாக்கல் செய்துள்ளது.

சட்டமா அதிபர், திறைசேரி செயலாளர், பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை, தொலைத்தொடர்பு நிறுவனத்தின் தலைவர் உட்பட 34 பேர் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்.

மேலும் 49.5 சதவீத பங்குகளை தனியாருக்கு விற்பதன் மூலம் மக்களின் தகவல் தொடர்புத் தேவைகளில் பெரும்பகுதியை வழங்கும் நிறுவனம், அரசின் கட்டுப்பாட்டில் இருந்து இழக்கப்படும் என்றும் மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

மேலும், இந்த மனுவை பொதுநலன் தொடர்பான அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்றும் மனுதாரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Leave a Reply