முட்டைக்கு விலை நிர்ணயம் – அதிவிசேட வர்த்தமானி வெளியானது!

முட்டைக்கான அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணயித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

நிறையின் அடிப்படையில் முட்டைகளை விற்பனை செய்வதற்கான அதிகபட்ச சில்லறை விலையும் குறித்த வர்த்தமானி மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் வெள்ளை முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 880 ரூபாயாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு கிலோகிராம் சிவப்பு முட்டையின் அதிகபட்ச சில்லறை விலை 920 ரூபாய் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வெள்ளை நிற முட்டை ஒன்றின் அதிகபட்ச சில்லறை விலை  44 ரூபாயாகவும், சிவப்பு நிற முட்டை ஒன்றின் சில்லறை விலை 46 ரூபாயாகவும் காணப்படுகின்றது.

Leave a Reply