சினிமாவை விட்டு ஓடிவிடு ..! பிக்பாஸ் லாஸ்லியாவை மிரட்டிய பிரபல இயக்குநர்…!

தமிழில் இடம்பெற்ற பிக்பாஸ் சீசன்3 இல் இலங்கையிலிருந்து போட்டியாளராக கலந்துகொண்டவர்தான் லாஸ்லியா.

பிக்பாஸ் வீட்டில் இருக்கும் போது இவரது க்யூட்டான புன்னகையால் சக போட்டியாளர்களை மட்டுமன்றி பல்லாயிரக்கணக்கான ரசிகர்களை தன்னகத்தே ஈர்த்தார்.


இவ்வாறானதொரு நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் பின்னர் லாஸ்லியாவை தேடி திரையுலக வாய்ப்புக்கள் வந்த நிலையில் ஓரிரு படங்களில் நடித்துள்ளார்.

இருப்பினும் குறித்த படங்கள் எதிர்பார்த்தளவு வெற்றியளிக்கவில்லை.

இந்நிலையில் அடிக்கடி சமூவலைத்தளங்களில் தனது விதம் விதமான போட்டோக்களை பகிர்ந்து வருகின்றார்.

இவ்வாறானதொரு நிலையில்  ‘கூகுள் குட்டப்பா’ என்ற திரைப்படத்திலும் லாஸ்லியா  நடித்துள்ளார்.

அந்த திரைப்படத்தில் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

அந்த வகையில் திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பொழுது லாஸ்லியாவை  பார்த்து எதார்த்தமாக கலாய்த்துள்ளார் ரவிக்குமார்.

 ரவிக்குமார் லாஸ்லியாவை பார்த்து ‘நீ கொஞ்சம் குண்டாகி விடு அப்பொழுது தான் தமிழ் சினிமாவில் உனக்கு நிரந்தர இடம் கிடைக்கும் இல்லை என்றால் நீ இப்படி ஒல்லியாகவே இருந்தால் ஹிந்தி சினிமா பார்க்கும் ஓடிவிடு என்ற அவரை வம்பு இழுக்கும் வகையில் பேசியுள்ளார். அது தற்பொழுது சர்ச்சையாக எழுந்துள்ளதுடன் லாஸ்லியாவின் ரசிகர்களும் தமது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

Leave a Reply