கொழும்பில் உள்ள மிகப்பெரிய மைதானத்தில் மொட்டின் பிரமாண்டமான மேடை.!samugammedia

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாளையதினம் மிகப்பாரிய அளவிலான, மே தின பேரணியை நடத்தவுள்ளதாக கட்சியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சாகர காரியவசம் தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு மே தினப் பேரணி, பிரமாண்டமான மேடையில் மக்கள் பங்கேற்புடன் நடத்தப்படும் என்றும் அவர் குறிப்பிட்டள்ளார்.

மேலும், கொழும்பில் உள்ள மிகப்பெரிய மைதானம் அதற்காக ஏற்கனவே தயாராக உள்ளதாகவும் குறிப்பிட்டள்ளார்.

யார் எவ்வாறு அவதூறு செய்தாலும் அவர்கள் வழியில் சென்று ஜனநாயகத்தை பாதுகாக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

குறிப்பாக நாட்டுக்காகவும் நாட்டின் எதிர்காலத்திற்காகவும் தமது கட்சி அர்ப்பணிப்புடன் செயற்படுவதாக மேலும் தெரிவித்தார்.

Leave a Reply