உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகவுள்ள செய்தி!

உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் சாதகமான பதிலை வழங்க எதிர்பார்ப்பதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பிலான இறுதி தீர்மானம் ஒன்றை எட்டுவதற்காக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனம் இன்று பிற்பகல் கூடவுள்ளது.

இந்நிலையில் ஜனாதிபதியுடன் பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் நடத்த எதிர்ப்பார்த்துள்ள கலந்துரையாடலை அடுத்த வாரம் ஒழுங்கு செய்யவுள்ளதாக ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்ரிய அண்மையில் தெரிவித்தார்.

இவ்வாறான, பின்னணியில் உயர்தர பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு பணிகளில் ஈடுபடுவது தொடர்பில் இன்றைய தினம் சாதகமான பதிலை வழங்கவுள்ளதாக பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்க சம்மேளனத்தின் ஊடக பேச்சாளர் சாருதத்த இலங்கசிங்க தெரிவித்துள்ளார்.

The post உயர்தர பரீட்சை வினாத்தாள் மதிப்பீடு தொடர்பில் வெளியாகவுள்ள செய்தி! appeared first on Today Jaffna News – Jaffna Breaking News 24×7.

Leave a Reply