தமிழ் பேசும் முஸ்லீம் தரப்புக்களையும் ஜனாதிபதி அழைக்கவேண்டும் – செல்வம் வலியுறுத்து.! samugammedia

இனப்பிரச்சனைக்கான தீர்வு  விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடலின் போது தமிழ் பேசும் முஸ்லீம் தரப்புக்களையும் உள்வாங்க வேண்டுமென தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியுள்ளார்.

இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு வலியுறுத்தியிருந்தார்.

கடந்த காலங்கைளை போல் அல்லது இன்றைய பேச்சுவார்தையில் தீர்க்கமான முடிவு ஒன்றினை ஜனாதிபதி வழங்கவேண்டும் என்றும் செல்வம் அடைக்கலநாதன் குறிப்பிட்டுள்ளார்.

முன்னெப்போதும் இல்லாதவாறு வடக்கில் தமிழ் மக்களின் காணிகள் மற்றும் வாரலாற்று இடங்கள் திட்டமிட்டு பௌத்த பேரினவாதிகளினால் கைகயப்படுத்தப்படுவதாக செல்வம் அடைக்கலநாதன் குற்றம் சுமத்தியுள்ளார்.

இன்று காணி அபகரிப்பு தொடர்பான கலந்துரையாடலே ஜனாதிபதியுடன் நடைபெறவுள்தாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Leave a Reply