ஸ்ரீலங்கா அமரபுர மஹா நிகாயவின் மஹாநாயக்கர் வணக்கத்திற்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் காலமானார்.
இறக்கும் போது அவருக்கு வயது 84.
வணக்கத்துக்குரிய தொடம்பஹல சந்திரசிறி தேரர் கொழும்பு வைத்தியசாலையொன்றில் சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே காலமானதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் இறுதி நிகழ்வுகள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவல்களும் வெளியாகவில்லை.